யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மகா விகாரையில் அரச வெசாக் விழா

யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மகா விகாரையில் அரச வெசாக் விழா

யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மகா விகாரையில் அரச வெசாக் விழா

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 7:15 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மகா விகாரையில் அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள், 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்