மேற்கு முனைய முதலீட்டுத் திட்டம் தொடர்பான இலங்கை அரசின் அறிவிப்பு வியப்பளிக்கிறது – இராஜதந்திர தகவல்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 4:27 pm

Colombo (News 1st) கொழும்பு தெற்கு துறைமுகத்தின் மேற்கு முனையத்திற்கான முதலீட்டு திட்டத்திற்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணக்கப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கம் நேற்று (02) வௌியிட்ட அறிவிப்பு வியப்பளிப்பதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு தேவையான முதலீடுகளை இலங்கை அரசாங்கமே தீர்மானிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லவெனவும் அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கு முனைய திட்டத்திற்காக Adani Ports & Special Economic Zone Limited முன்வைத்த பிரேரணைக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணக்கப்பாடு கிடைத்ததாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்