பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை

பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை

பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 6:01 pm

Colombo (News 1st) நிறுவனங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்த்து, அரச நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

பத்தரமுல்லை, சுஹுறுபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல், குறைந்த வசதிகளைக் கொண்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை செயற்படுத்தல், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல், கடல் மாசை தடுத்தல், மீன் வள துறைமுகங்களின் திண்மக்கழிவு மேலாண்மை, மீன்பிடி துறைமுகங்களில் மணல் அகற்றுதல், சமூக நில மேம்பாடு உள்ளிட்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்குரிய நிறுவனங்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு இதன்போது பிரதமர் தீர்வு வழங்கியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை மறுசீரமைப்பு, மாத்தறை கோட்டை மற்றும் கண்டி வாகன தரிப்பிடம் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அந்தந்த அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக்கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல சேவைகளை நிறைவேற்ற முடியும் என பிரதமர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்