பெருந்தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் அமைதிப் போராட்டம்

பெருந்தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் அமைதிப் போராட்டம்

பெருந்தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் அமைதிப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 8:34 pm

Colombo (News 1st) பெருந்தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் இன்று அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மஸ்கெலியா – ஓல்டன் தோட்டத்தின் முகாமையாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் – மல்லிகைப்பூ சந்தியில் இரு மருங்கிலும் பதாகைகளை ஏந்தியவாறு தோட்ட அதிகாரிகளும் முகாமையார்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 23 தோட்ட நிறுவனங்களை சேர்ந்த தோட்ட அதிகாரிகளும் முகாமையாளர்களும் பங்கேற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஓல்டன் தோட்ட முகாமையாளரும் உதவி முகாமையாளரும் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பாக 7 பெண்களும், 3 ஆண்களும் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்