by Staff Writer 03-03-2021 | 1:59 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - சிலாவத்தை பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சார்த்தி ஒருவருக்கு பதிலாக சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெடுங்கேணி - பரசன்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கெக்கிராவ - மடாத்துகம பரீட்சை மத்திய நிலையத்தில் மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.