கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Staff Writer

03 Mar, 2021 | 8:16 am

Colombo (News 1st) நாட்டில் மேலும் 7 கொரோனா மரணங்கள் நேற்று (02) உறுதிப்படுத்தப்பட்டன.

இதனடிப்படையில், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – 15 (இருவர்), கொழும்பு – 05, பிலியந்தலை, பிலிமதலாவை, கொழும்பு – 02 மற்றும் கலேவெல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 7 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுடன் 83,870 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்