9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது ; யாழில் சம்பவம்

9 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது ; யாழில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2021 | 12:10 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டுள்ள தாயை, யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் இன்று (02) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாய் தனது 09 மாத ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்புறுத்தப்பட்ட குழந்தையும் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குழந்தையுடன் குறித்த தாய் குவைத்திலிருந்து வருகை தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்