28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM

28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM

28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2021 | 9:51 am

Colombo (News 1st) இலங்கை வானொலி வரலாற்றில் சிங்கள மொழியில் புதிய பரிணாமத்தை பதிவு செய்த சிரச FM இன் 27 ஆவது ஆண்டு பூர்த்தி இன்றாகும்.

புதிய வருடத்தில் தடம் பதிக்கும் எமது சகோதர வானலை சேவைக்கு நியூஸ்பெஸ்ட்டின் வாழ்த்துக்கள்.

பல்வேறு ஜனரஞ்சக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, நேயர்களின் விருப்பத் தேர்வாக சிரச FM வலம் வருகிறது.

சிரச வானொலியின் பிறந்தநாளை முன்னிட்டு சில வேலைத்திட்டங்களும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தங்கப்பரிசை வெல்லும் வாய்ப்பிற்கான சந்தர்ப்பமும் நேயர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

15 நிமிடங்களுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படும் நேயர்களுக்கு 5,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளதுடன், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வௌிக்கொணர்வதற்கான நிகழ்ச்சியும் இன்று நடத்தப்படவுள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சிரச வானொலியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களுக்கு குளிர்சாதனப்பெட்டி, மைக்ரோவேவ் அவன் உள்ளிட்ட சமையலறை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்