பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க தீர்மானம் 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க தீர்மானம் 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2021 | 2:22 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

முதலாளிமார் சம்மேளனத்தின் ஆட்சேபனைக்கு மத்தியில், சம்பள நிர்ணய சபையில் நேற்று (01)  இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதை ஆட்சேபித்து பெருந்தோட்ட நிறுவனங்கள் சார்பில் 197 ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்