சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு

சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு

சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2021 | 6:08 pm

Colombo (News 1st) கடந்த வருடம் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற LPL கிரிக்கெட் தொடரில், ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்கவின் பிணை மனு கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் இன்று நிராகரித்துள்ளார்.

சட்டத்தரணி நுவன் பெலிகஹவத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை, பூரணப்படுத்தப்படாமல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மேலதிக நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், அதனை முழுமைப்படுத்தி சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விளையாட்டுத்துறையில் குற்றங்களைத் தடுக்கும் விசேட பிரிவு இன்று மன்றுக்கு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்