ஆரோக்கியமான ஆயுட்காலம் கொண்டவர்களை உருவாக்க வேண்டும்: பிரதமர்

ஆரோக்கியமான ஆயுட்காலம் கொண்டவர்களை உருவாக்க வேண்டும்: பிரதமர்

ஆரோக்கியமான ஆயுட்காலம் கொண்டவர்களை உருவாக்க வேண்டும்: பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2021 | 5:08 pm

Colombo (News 1st) விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது, வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆற்றல் மிகுந்த சந்ததியினருக்காக ‘கிராமத்திற்கு மைதானம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் எண்ணக்கருவிற்கமைய, விளையாட்டிற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நாட்டில் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

நல்ல ஆரோக்கியமான ஆயுட்காலம் கொண்டவர்களை இந்நாட்டில் உருவாக்குவதற்கே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொறுமை, கட்டுப்பாடு, தன்னலமற்ற தன்மை மற்றும் சமூக உணர்வைக் கொண்ட தலைமுறையை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

கணினி மற்றும் தொலைபேசிக்கு அடிமையாவதிலிருந்து இளம் சமூகத்தை விடுவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்