கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

01 Mar, 2021 | 2:53 pm

Colombo (News 1st) இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை இன்று (01) ஏற்றிக் கொண்டார்.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்துவைக்கும் முகமாக அவர் இன்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு டில்லியிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் என்பன இணைந்து Covaxin தடுப்பூசியை தயாரித்துள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Covaxin தடுப்பூசியை பெற்றுக் கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வரும் பின்புலத்தில் பிரதமர் இன்று தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளார்.

தாம் தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வௌியிட்டு, அனைத்து இந்தியர்களும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முன்வர வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்