Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் நாளை (01) காலை 05 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட கபூர் வீதி (Gafoor Road), மொஹினார் ஒழுங்கை (Mohinar Lane), சின்னதோன வீதி (Sinnathone Road) மற்றும் டெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு ஆகிய பகுதிகளில் நாளை (01) காலை முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளது.
