கொட்டாவ பகுதியில் போதைப்பொருட்களுடன் இளைஞர் கைது

கொட்டாவ பகுதியில் போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது

by Staff Writer 28-02-2021 | 2:38 PM
Colombo (News 1st) கொட்டாவ - கலவிலபுர பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலுக்கமைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (27) சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 16 கிலோ 777 கிராம் கஞ்சா மற்றும் 54 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.