சுகாதார விதிமுறைகளுடன் சா/த பரீட்சை நாளை ஆரம்பம் 

சுகாதார விதிமுறைகளுடன் சா/த பரீட்சை நாளை ஆரம்பம் 

சுகாதார விதிமுறைகளுடன் சா/த பரீட்சை நாளை ஆரம்பம் 

எழுத்தாளர் Staff Writer

28 Feb, 2021 | 4:53 pm

Colombo (News 1st) கொரோனாவினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நாளை (01) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 622,351 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 4,513 பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் மேலதிகமாக, மாகாண மட்டத்தில் மேலதிக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்