by Bella Dalima 27-02-2021 | 5:57 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச T20 கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு பின்னர் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்லுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வேகப்பந்து வீச்சாளரான ஃபிடல் எட்வர்ட்ஸ் (Fidel Edwards) 9 வருடங்களின் பின்னர் மேற்கிந்தியத்தீவுகள் சார்பாக சர்வதேச போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கெதிரான லீக் போட்டியில் வெற்றியீட்டும் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்த நிக்கொலஸ் பூரான், பேபியன் அலன் ஆகியோருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 13 பேர் கொண்ட குழாத்தில் சகலதுறை வீரர் கீரன் பொலார்ட் அணித்தலைவராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
ஷாய் ஹோப் உபதலைவராக பெயரிடப்பட்டுள்ளதுடன், சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டருக்கும் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
West Indies T20I team: Kieron Pollard (captain), Nicholas Pooran (vice-captain), Fabian Allen, Dwayne Bravo, Fidel Edwards, Andre Fletcher, Chris Gayle, Jason Holder, Akeal Hosein, Evin Lewis, Obed McCoy, Rovman Powell, Lendl Simmons, Kevin Sinclair
West Indies ODI team: Kieron Pollard (captain), Shai Hope (vice-captain), Fabian Allen, Darren Bravo, Jason Holder, Akeal Hosein, Alzarri Joseph, Evin Lewis, Kyle Mayers, Jason Mohammed, Nicolas Pooran, Romario Shepherd, and Kevin Sinclair