நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி; மின்சார விநியோகத்தில் சிக்கல்

நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி; மின்சார விநியோகத்தில் சிக்கல்

நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி; மின்சார விநியோகத்தில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2021 | 2:28 pm

Colombo (News 1st) நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வறட்சியுடன் கூடிய காலநிலையினால், 74 வீதமான மின்சார உற்பத்தியை நிலக்கரி மற்றும் டீசல் வெப்ப மின் உற்பத்தி நிலையங்களில் மேற்கொள்ள ​வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் 38.46 கிகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகின்றது.

வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி 23.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கிணங்க, பிரதான மின் கட்டமைப்பில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சாரத்தில்
74.92 வீதம் நிலக்கரி மற்றும் டீசல் வெப்ப மின் உற்பத்தி நிலையங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், இடையூறின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்