காணாமற்போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

காணாமற்போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

காணாமற்போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2021 | 6:55 pm

Colombo (News 1st) காணாமற்போனோரின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் சந்திக்கவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

காணாமற்போனோர் பிரச்சினையை முடிவிற்குக் கொண்டு வரும் வகையிலும், குடும்பத்தினருக்கு தீர்வை வழங்குவதற்காகவும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்ததாக, த ஹிந்து வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் கருத்துக்களை விட, காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடி, உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு, தீர்வு வழங்கப்படவுள்ளதாக வௌிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் த ஹிந்து பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்