டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்: இந்தியா முன்னிலை

டெஸ்ட் கிரிக்கெட் உலகக் கிண்ண தரப்படுத்தல்: இந்தியா முன்னிலை

by Staff Writer 26-02-2021 | 3:15 PM
Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் கிரிக்கெட் உலகக் கிண்ண தரப்படுத்தல் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையிலுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கட்களால் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி முன்னிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் உலகக் கிண்ண தரப்படுத்தல் பட்டியலில் நியூசிலாந்து அணி இரண்டாமிடத்திலுள்ளது.