by Staff Writer 26-02-2021 | 3:06 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் சிசு செரிய பஸ் சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சிசு செரிய பஸ் சேவையின் கீழ் முன்னெடுக்கப்படும் அனைத்து பஸ் சேவைகளும் குறித்த காலப்பகுதியில் சேவையில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான நாட்களில் குறித்த பஸ் சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
சிசு செரிய பஸ்கள் சேவையில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் பிற பயணிகளை பஸ்ஸில் ஏற்றக்கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் மாணவர் ஒருவரின் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் பாடசாலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைவாக மாணவர்கள் போக்குவரத்தில் ஈடுபடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.