பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் மீது தாக்குதல்: தொடர்புடைய அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2021 | 2:56 pm

Colombo (News 1st) பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குள் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தாம் உத்தரவிட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்