தமிழ் தேசியக் கட்சிகள் வவுனியாவில் சந்திப்பு; சமயத் தலைவர்களும் பங்கேற்பு

தமிழ் தேசியக் கட்சிகள் வவுனியாவில் சந்திப்பு; சமயத் தலைவர்களும் பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2021 | 7:03 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கட்சிகள் சிலவற்றின் பிரதிநிதிகள் பங்குகொள்ளும் சந்திப்பொன்று வவுனியாவில் இன்று நடைபெற்றது.

சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர்.

தமிழ் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

வெகுவிரைவில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, முன்னேறுவது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான வாக்குறுதியை மதத் தலைவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் சுமந்திரன் கூறினார்.

எனினும், இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்