COVID தொற்றிலிருந்து 447 பேர் இன்று குணமடைந்தனர்

COVID தொற்றிலிருந்து 447 பேர் இன்று குணமடைந்தனர்

by Bella Dalima 25-02-2021 | 3:36 PM
Colombo (News 1st) நாட்டில் COVID தொற்றுக்குள்ளானவர்களில் 447 பேர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 76,961 ஆக அதிகரித்துள்ளது. 81,467 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4,049 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.