ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2021 | 9:01 pm

UPDATE: உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிசேட வர்த்தமானியினூடாக பூதவுடலின் தகனம் எனும் சொல்லுக்கு பதிலாக ” பூதவுடலின் தகனம் அல்லது அடக்கம்” எனும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மரணிப்பவரின் உடலை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்படும் பணிப்புரைகளுக்கு இணங்கவும் அவரின் மேற்பார்வையின் கீழும் தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்யலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிதாக வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் “தகனத்திற்கான அவசிய கடமைகளை” எனும் சொல்லுக்கு பதிலாக “தகனத்திற்கான அல்லது அடக்கம் செய்வதற்கான அவசிய கடமைகளை” எனும் சொல் சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

——————————–

Colombo (News 1st)  COVID தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் S.M.சந்திரசேன குறிப்பிட்டார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இவ்விடயத்தைக் கூறியதாக  S.M.சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானியை இன்றே வௌியிட எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்