ஹொரணையில் விசேட சுற்றிவளைப்பு ; 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது 

ஹொரணையில் விசேட சுற்றிவளைப்பு ; 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது 

ஹொரணையில் விசேட சுற்றிவளைப்பு ; 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2021 | 9:32 am

Colombo (News 1st) ஹொரணை பகுதியில் சுமார் 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை ஊழல் ஒழிப்புப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பயணித்த வேனொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதிலிருந்து 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த வேன் இராணுவத்திற்கு உரித்தான வாகனம் என்ற வகையில் இலக்கங்கள் பொருத்தப்பட்டிருந்தததாகவும் வாகன சாரதி இராணுவ சீருடை அணிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட மற்றுமொருவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற லான்ஸ் கோப்ரல் எனவும் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்