பொகவந்தலாவை – செபல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது

பொகவந்தலாவை – செபல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது

பொகவந்தலாவை – செபல்டன் தோட்டத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2021 | 12:12 pm

Colombo (News 1st) நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை சுகாதார சேவை பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பகுதி (PS Section of Chapalton Estate) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் கொரோனா மரணம் ஒன்று பதிவாகியதை தொடர்ந்து அங்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனால் செப்பல்டன் தோட்டத்தின் PS பிரிவை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பொலிஸார் இந்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்