நடிகை நிரஞ்சனி – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திருமணம்

நடிகை நிரஞ்சனி – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திருமணம்

நடிகை நிரஞ்சனி – இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2021 | 3:27 pm

நடிகை நிரஞ்சனி – இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றுள்ளது.

பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகளான நிரஞ்சனி கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

அவர்களது திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்