by Bella Dalima 24-02-2021 | 5:47 PM
Colombo (News 1st) COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலகின் முதலாவது இலவச கொரோனா தடுப்பூசி தொகுதியை கானா பெற்றுக்கொள்ளவுள்ளது.
உலக நாடுகள் மத்தியில் பாரபட்சமற்ற விதத்தில் தடுப்பூசிகளைப் பகிர்வதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அத்துடன், இந்த வருட இறுதிக்குள் 2 பில்லியன் தடுப்பூசி தொகுதிகளை உலகளாவிய ரீதியில் பகிர்வதற்கு COVAX உத்தேசித்துள்ளது.
Oxford Astrazeneca தடுப்பூசிகள் 6 இலட்சம் கானா தலைநகர் அக்ராவை இன்று சென்றடைந்துள்ளன.
வரலாற்றில் இதுவொரு முக்கியமான நிகழ்வென UNICEF மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை ஒழிக்கும் திட்டத்தில் COVID-19 தடுப்பூசிகளை கானாவிற்கு கொண்டு சேர்த்துள்ளமை மிக முக்கியமான நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.