by Staff Writer 24-02-2021 | 9:35 PM
Colombo (News 1st) சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டத்துடன் (China Pakistan Economic Corridor) இணையுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை நேற்று (23) சந்தித்த சந்தர்ப்பத்திலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் இன்று வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பான மாநாட்டிலும் இந்த பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் பங்களிப்பில் கொழும்பில் இந்த மாநாடு நடைபெற்றது.
சீனாவின் ஒரே பாதை ஒரே மண்டலம் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் க்வதார் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் சீன - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டம் 62 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்டதாகும்.
இதனூடாக இரண்டு நாடுகளையும் இணைக்கும் வீதி மற்றும் ரயில் போக்குவரத்து அடிப்படை வதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், வர்த்தக மற்றும் முதலீட்டுத் திட்டங்களும் தனியாக முன்னெடுக்கப்படுகின்றன.