நேற்றைய தினம் கொரோனா மரணங்கள் உறுதியாகிய பிரதேசங்கள்

நேற்றைய தினம் கொரோனா மரணங்கள் உறுதியாகிய பிரதேசங்கள்

நேற்றைய தினம் கொரோனா மரணங்கள் உறுதியாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Feb, 2021 | 8:24 am

Colombo (News 1st) நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (23) 3 கொரோனா மரணங்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.

வத்தளை பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 75 வயதான ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் COVID – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு நேற்று முன்தினம் (22) உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு கொரோனா நியூமோனியா நிலைமையே காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்று நிலைமையால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வலப்பனை பகுதியை சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், கடந்த 21ஆம் திகதி வீட்டிலே உயிரிழந்துள்ளார்.

COVID – 19 நியூமோனியா மற்றும் குருதி நஞ்சாகியமையே இவரது மரணத்திற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இதனிடையே, நேற்று (23) 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 81,009 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 75,842 பேர் குணமடைந்துள்ளதுடன் 4,714 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்