நாரஹேன்பிட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் இடத்தில் அமைதியின்மை 

by Staff Writer 24-02-2021 | 1:40 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்டவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அருகில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் இடத்தில் இன்று (24) காலை அமைதியின்மை ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக பெருமளவானோர் ஒன்றுதிரண்டிருந்தனர். எனினும், குறிப்பிட்ட அளவான தடுப்பூசிகள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை நிலவியது. அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.