நட்சத்திர Golf வீரர் டைகர் வுட்ஸுக்கு சத்திரசிகிச்சை

நட்சத்திர Golf வீரர் டைகர் வுட்ஸுக்கு சத்திரசிகிச்சை

நட்சத்திர Golf வீரர் டைகர் வுட்ஸுக்கு சத்திரசிகிச்சை

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2021 | 12:01 pm

Colombo (News 1st) நட்சத்திர கொல்ப் (Golf) வீரரான டைகர் வுட்ஸுக்கு (Tiger Woods) விபத்தொன்றில் பாரிய காயங்கள் ஏற்பட்டதையடுத்து சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலெஸ்ஸில் இடம்பெற்ற கார் விபத்தில் அவரது காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.

டைகர் வுட்ஸ் பயணித்த கார் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்துக்குள்ளான கார் பாரிய சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த காரிலிருந்த டைகர் வுட்ஸை தீயணைப்புப் படையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தை எதிர்கொண்ட சந்தர்ப்பத்திலும் டைகர் வுட்ஸ் சுயநினைவுடனிருந்ததாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

45 வயதான அவர் கலிபோர்னியாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்