கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Feb, 2021 | 11:10 am

Colombo (News 1st) இன்று (24) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 492 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 103 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 88 பேரும் கண்டி மாவட்டத்தில் 29 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் 53 பேரும் பதுளை மாவட்டத்தில் மூவரும் புத்தளம் மாவட்டத்தில் இருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 48 பேரும் யாழ். மாவட்டத்தில் 32 நபர்களும் மன்னார் மாவட்டத்தில் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேரும் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கோட்டை பகுதியில் 37 பேருக்கும் நாரஹேன்பிட்ட பகுதியில் 11 பேருக்கும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் நால்வருக்கும் பொரளையில் மூவருக்கும் கிரேண்ட்பாஸ் பகுதியில் நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா – களனி பகுதியில் 14 பேரும் நீர்கொழும்பு பிரதேசத்தில் மூவரும் வத்தளை பிரதேசத்தில் நால்வரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

பொகவந்தலாவை பகுதியில் 23 பேருக்கும் லிந்துலை பகுதியில் 14 பேருக்கும் நுவரெலியா பிரதேசத்தில் 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் ஒருவருக்கும் யாழ்ப்பாணத்தில் நால்வருக்கும் கோப்பாய் பகுதியில் ஒருவருக்கும் பருத்தித்துறை பகுதியில் 26 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை பிரதேசத்தில் 24 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்கள் பதிவாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இன்று (24) காலை வரையில் நாட்டில் 81,009 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 75,842 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (23) 3 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 11,222 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்