இலங்கை வௌிவிவகார அமைச்சரின் பதிலுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

இலங்கை வௌிவிவகார அமைச்சரின் பதிலுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

இலங்கை வௌிவிவகார அமைச்சரின் பதிலுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2021 | 3:37 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேசக் குற்றங்களை மறுப்பதாகவும் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும் கூறியதாக கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கேட்ட பின்னர், நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை எவராலும் நம்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்