இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் ஆரம்பம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் ஆரம்பம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2021 | 10:12 am

Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள 3 நிலையங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 85 நிலையங்களில் தேர்தல் நடைபெறுகின்றது.

இம்முறை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான குவேர டி சொய்சா மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்று (24) மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்