கூட்டமைப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

கூட்டமைப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2021 | 3:09 pm

Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸ் (Alaina B.Teplitz) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தின் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வட மாகாண சபைத் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

வட மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப்பிரச்சினை, மனித உரிமை விடயங்கள், அரசியல் நிலவரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளாதாக நியூஸ்ஃபெஸ்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்