Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகள் வௌியீடு

Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகள் வௌியீடு

Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகள் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 11:52 am

Colombo (News 1st) Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகளை நாசா வௌியிட்டுள்ளது.

தரையிறங்கும் போது மேற்பரப்பிலுள்ள மணல் துகள்கள் விண்கலத்தின் விசையினால் வௌித்தள்ளப்படும் காட்சி தத்ரூபமாக பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை பார்வையிடும் ஒவ்வொருவரையும் தம்முடனான செவ்வாயின் பயணத்தில் இணைத்துள்ளதாக நாசாவின் செவ்வாய் பயணக் கட்டுப்பாட்டு நிலையத்தின் ஆய்வுகூட பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை செய்யவாய்க் கிரகததில் தரையிறங்கியது.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு செவ்வாயிலுள்ள குன்றுகளில் லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் முன்பு உயிர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
cont[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்