27 ஆம் திகதி முதல் கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படுகிறது

27 ஆம் திகதி முதல் கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படுகிறது

27 ஆம் திகதி முதல் கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 3:40 pm

Colombo (News 1st) சுகாதார வழிமுறைகளுக்கு அமைய கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (27) முதல் கோள்மண்டலத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோல் மண்டலத்தின் பணிப்பாளர் அருண பிரபா பெரேரா தெரிவித்தார்.

27 ஆம் திகதி காலை 10 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் கோள் மண்டலத்தில் இரண்டு காட்சிகளைக் காண்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அருண பிரபா பெரேரா குறிப்பிட்டார்.

பார்வையிடும் திகதியை முன்னதாகவே பதிவு செய்து கொண்டு வருமாறு பார்வையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

011-2586499 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு கோள் மண்டலத்தை பார்வையிடுவதற்கான முற்பதிவினை மேற்கொள்ள முடியும் என அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்