பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ஹட்டன் இளைஞர் கைது

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ஹட்டன் இளைஞர் ஒருவர் கைது

by Staff Writer 23-02-2021 | 12:36 PM
Colombo (News 1st) பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 25 வயது இளைஞர் ஒருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் இணையத்தளத்தினூடாக பல்வேறு தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டில் இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். Tik Tok செயலியினூடாக இவர் பல்வேறு நிழற்படங்களை பகிர்ந்துள்ளதுடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் முல்லைத்தீவில் பிறந்து, ஹட்டனில் வசிப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான ஆவணங்கள் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்புப்பிரிவில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.