ரஞ்சன் ராமநாயக்கவின் பா. உறுப்புரிமை குறித்த தீர்மானத்தை அறிவிக்குமாறு கோரி சபையில் எதிர்ப்பு 

by Staff Writer 23-02-2021 | 12:12 PM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து சபாநாயகரின் தீர்மானத்தை அறிவிக்குமாறு கோரி, எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சபைக்குள் இன்று (23) எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பிரதி சபாநாயகர் பதில் வழங்கினார். பிரதி சபாநாயகர் அவர்களே, ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நாளைய தினம் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் குறித்த கேள்விகளை சபாநாயகரிடம் மீண்டும் தாம் சமர்ப்பிப்பதாகவும் கூறிய பிரதி சபாநாயகர், சபை நடவடிக்கைகளை குழப்பாமல், அதனை உரிய வகையில் முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.