மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது என இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: வி.முரளிதரன்

மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது என இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: வி.முரளிதரன்

மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது என இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: வி.முரளிதரன்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 3:16 pm

Colombo (News 1st) தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளக் கூடாது என இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் வி.முரளிதரன் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களின் 62 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வி.முரளிதரன் கூறியதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 284 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், 53 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் மாநிலங்களவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்