நெடுந்தீவு கடற்பகுதியில் காணாமற்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

நெடுந்தீவு கடற்பகுதியில் காணாமற்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

நெடுந்தீவு கடற்பகுதியில் காணாமற்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 5:12 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் காணாமற்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

20 வயதுடைய மரியவேதநாயகம் நேயன் என்பவரின் சடலம் நெடுந்தீவிற்கும் நைனாதீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடிப் படகில் பயணித்த இரு மீனவர்கள் நேற்று முன்தினம் (21) மாலை முதல் காணாமற்போயிருந்தனர்.

நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவானுக்கு கடல் உணவுகளை ஏற்றிச்சென்ற இரு மீனவர்களும் அங்கிருந்து நேற்று முன்தினம் பகல் திரும்பியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

மாலையாகியும் மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில், படகு மாத்திரம் நெடுந்தீவு கிழக்கு அந்தோனியார் கோவில் கடற்கரையில் கரையொதுங்கியது.

நெடுந்தீவு பத்தாம் வட்டாரத்தை சேர்ந்த 43 வயதான ஞானசிங்கம் ரொபின்சன் என்பவரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்