ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சரின் உரை இன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சரின் உரை இன்று

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சரின் உரை இன்று

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 9:02 am

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் (UNHRC) வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்று (23) இரவு உரை நிகழ்த்தவுள்ளார்.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்துள்ள அறிக்கை குறித்து நாளை (24) விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (22) ஆரம்பமானது.

நிலவும் கொரோனா தொற்று காரணமாக இம்முறை கூட்டத் தொடர் இணையவழியில் நடத்தப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்