ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றுக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

by Staff Writer 23-02-2021 | 3:05 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே சபாநாயகர் இந்த விடயத்தைக் கூறினார். தனக்கான பிரதி மாத்திரமே கிடைத்துள்ளதாகவும், அறிக்கையின் மேலதிக பிரதிகள் நாளை (24) கிடைத்தவுடன் அவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார். இதேவேளை, நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க முடியாது எனவும் சபாநாயகர் கூறினார்.