இந்திய உயர்ஸ்தானிகர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2021 | 5:47 pm

Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் இன்று சந்தித்தனர்.

இன்று காலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, பலாலி விமான நிலையம் மீள திறக்கப்பட வேண்டும் எனவும் மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜெனிவா வரைபு ஏமாற்றமளிப்பதாவும் அதனை திருத்தி அமைக்க வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்