வெலே சுதாவை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு 

வெலே சுதாவை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு 

வெலே சுதாவை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு 

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2021 | 3:53 pm

Colombo (News 1st) பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ எனப்படும் கம்பளை விதானகே சமந்த குமாரவை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இன்று (22) சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமது சேவைபெறுனர் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய 17 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மற்றும் சொத்துகளுக்கு உரிமை கோரியமையினூடாக நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபரினால் வெலே சுதா, அவரின் மனைவி மற்றும் உறவினரான பெண் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்