23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி; நேர அட்டவணை வௌியீடு

23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி; நேர அட்டவணை வௌியீடு

23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி; நேர அட்டவணை வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

20 Feb, 2021 | 3:45 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான நேர அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரையிறுதி போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

SSC மற்றும் பதுரலிய அணிகள் பங்குபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டி, கொழும்பு NCC மைதானத்தில் இடம்பெறுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது அரையிறுதி போட்டி கொழும்பு P.சாரா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கோல்ட்ஸ் மற்றும் லங்கன் கிரிக்கெட் சமாஜய அணிகள் மோதவுள்ளன.

இதற்கமைய, கொழும்பு SSC மைதானத்தில் இறுதிப்போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்