இலங்கை தொடர்பில் புதிய பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ள பிரித்தானியா

இலங்கை தொடர்பில் புதிய பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ள பிரித்தானியா

இலங்கை தொடர்பில் புதிய பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ள பிரித்தானியா

எழுத்தாளர் Bella Dalima

20 Feb, 2021 | 3:36 pm

Colombo (News 1st) இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டை நோக்காகக் கொண்டு, மனித உரிமைகள் ​பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் புதிய பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் Sarah Hulton நேற்று (19) தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை கொண்டுவரவுள்ள கனடா, ஜேர்மன், வட மெசிடோனியா, மலாவி, மொண்டிநீக்ரோ மற்றும் பிரித்தானியாவின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

யுத்த கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து அர்த்தமுள்ள அமைதியை ஏற்படுத்துவதற்கு இலங்கை பல விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி அபிவிருத்தி, கண்ணிவெடி அகற்றல், காணிகளை மீளக் கையளித்தல், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றல் ஆகிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்காகவே புதிய பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்