IPL ஏலம்: அதிக விலையில் விற்பனையான கிறிஸ் மோரிஸ்

IPL ஏலம்: அதிக விலையில் விற்பனையான கிறிஸ் மோரிஸ்

by Bella Dalima 19-02-2021 | 5:14 PM
Colombo (News 1st) இம்முறை IPL தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் சென்னையில் நேற்று (18) இடம்பெற்றது. இதன்போது, தென்னாபிரிக்காவின் 33 வயதான கிறிஸ்டோபர் மோரிஸ் இம்முறை அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் 16.25 கோடி இந்திய ரூபாவிற்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விருப்பம் தெரிவித்தன. இதனால் ஏலம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொகை 10 கோடியைத் தாண்டியது. இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் சற்று பின் வாங்கியது. ஆனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையே நிலவிய போட்டியில் இறுதியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 16.25 கோடி இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுத்தது. இம்முறை இலங்கை கிரிக்கட் வீரர்களில் ஒருவர் கூட ஏலத்தில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணிகள் வாரியாக வீரர்கள் விபரம் பின்வருமாறு (பண மதிப்பு இந்திய ரூபாவில்) ⭕ சென்னை சுப்பா் கிங்ஸ் கிருஷ்ணப்பா கௌதம் - ஆல் ரவுண்டா் - ரூ.9.25 கோடி மொயீன் அலி - ஆல் ரவுண்டா் - ரூ.7 கோடி சேதேஷ்வா் புஜாரா - பேட்ஸ்மேன் - ரூ.50 இலட்சம் கே.பகத் வா்மா - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் சி.ஹரி நிஷாந்த் - பேட்ஸ்மேன் - ரூ.20 இலட்சம் எம்.ஹரிசங்கா் ரெட்டி - பௌலா் - ரூ.20 இலட்சம் கையிருப்பு: ரூ.2.55 கோடி ⭕ டெல்லி கெப்பிட்டல்ஸ் டாம் கரன் - ஆல் ரவுண்டா் - ரூ.5.25 கோடி ஸ்டீவன் ஸ்மித் - பேட்ஸ்மேன் - ரூ.2.20 கோடி சாம் பில்லிங்ஸ் - விக்கெட் கீப்பா் - ரூ.2 கோடி உமேஷ் யாதவ் - பௌலா் - ரூ.1 கோடி ரிபல் படேல் - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் விஷ்ணு வினோத் - விக்கெட் கீப்பா் - ரூ.20 இலட்சம் லுக்மன் ஹுசைன் மேரிவாலா - பௌலா் - ரூ.20 இலட்சம் எம்.சித்தாா்த் - பௌலா் - ரூ.20 லட்சம் கையிருப்பு: ரூ.2.15 கோடி ⭕ கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ஷகிப் அல் ஹசன் - ஆல் ரவுண்டா் - ரூ.3.20 கோடி ஹா்பஜன் சிங் - பௌலா் - ரூ.2 கோடி பென் கட்டிங் - ஆல் ரவுண்டா் - ரூ.75 இலட்சம் கருண் நாயா் - பேட்ஸ்மேன் - ரூ.50 இலட்சம் பவன் நெகி - ஆல் ரவுண்டா் - ரூ.50 இலட்சம் வெங்கடேஷ் ஐயா் - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் ஷல்டன் ஜேக்சன் - விக்கெட் கீப்பா் - ரூ.20 இலட்சம் வைபவ் அரோரா - பௌலா் - ரூ.20 இலட்சம் கையிருப்பு: ரூ.3.20 கோடி ⭕ மும்பை இண்டியன்ஸ் நாதன் கோல்டா் நீல் - பௌலா் - ரூ.5 கோடி ஆடம் மில்னே - பௌலா் - ரூ.3.20 கோடி பியூஷ் சாவ்லா - பௌலா் - ரூ.2.40 கோடி ஜேம்ஸ் நீஷம் - ஆல் ரவுண்டா் - ரூ.50 இலட்சம் யுத்வீா் சாரக் - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் மாா்கோ ஜேன்சன் - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் அா்ஜுன் டெண்டுல்கா் - ரூ.20 இலட்சம் கையிருப்பு: ரூ.3.65 கோடி ⭕ பஞ்சாப் கிங்ஸ் ஜை ரிச்சா்ட்சன் - பௌலா் - ரூ.14 கோடி ரிலே மெரிடித் - பௌலா் - ரூ.8 கோடி ஷாருக் கான் - ஆல் ரவுண்டா் - ரூ.5.25 கோடி மொய்சஸ் ஹென்ரிக்ஸ் - ஆல் ரவுண்டா் - ரூ.4.20 கோடி டேவிட் மலான் - ஆல் ரவுண்டா் - ரூ.1.50 கோடி ஃபாபியான் ஆலன் - ஆல் ரவுண்டா் - ரூ.75 இலட்சம் ஜலஜ் சக்ஸேனா - ஆல் ரவுண்டா் - ரூ.30 இலட்சம் சௌரவ் குமாா் - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் உத்கா்ஷ் சிங் - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் கையிருப்பு: ரூ.18.80 கோடி ⭕ சன்ரைசா்ஸ் ஹைதராபாத் கேதாா் ஜாதா் - ஆல் ரவுண்டா் - ரூ.2 கோடி முஜீப் ஸா்தான் - பௌலா் - ரூ.1.50 கோடி ஜெ.சுசித் - பௌலா் - ரூ.30 இலட்சம் கையிருப்பு: ரூ.6.95 கோடி ⭕ ராஜஸ்தான் ரோயல்ஸ் கிறிஸ்டோபா் மோரிஸ் - ஆல் ரவுண்டா் - ரூ.16.25 கோடி ஷிவம் துபே - ஆல் ரவுண்டா் - ரூ.4.40 கோடி சேத்தன் சகாரியா - பௌலா் - ரூ.1.20 கோடி முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் - பௌலா் - ரூ.1 கோடி லியாம் லிவிங்ஸ்டன் - ஆல் ரவுண்டா் - ரூ.75 இலட்சம் கே.சி.கரியப்பா - பௌலா் - ரூ.20 இலட்சம் ஆகாஷ் சிங்- பௌலா் - ரூ.20 இலட்சம் குல்தீப் யாதவ் - பௌலா் - ரூ.20 இலட்சம் கையிருப்பு: ரூ.13.65 கோடி ⭕ ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் கைல் ஜேமிசன் - ஆல் ரவுண்டா் - ரூ.15 கோடி கிளென் மேக்ஸ்வெல் - ஆல் ரவுண்டா் - ரூ.14.25 கோடி டேன் கிறிஸ்டியன் - ஆல் ரவுண்டா் - ரூ.4.80 கோடி சச்சின் பேபி - பேட்ஸ்மேன் - ரூ.20 இலட்சம் ரஜத் பட்டிதாா் - பேட்ஸ்மேன் - ரூ.20 இலட்சம் முகமது அஸாருதீன் - விக்கெட் கீப்பா் - ரூ.20 இலட்சம் சுயாஷ் பிரபுதேசாய் - ஆல் ரவுண்டா் - ரூ.20 இலட்சம் கோனா ஸ்ரீகா் பரத் - விக்கெட் கீப்பா் - ரூ.20 இலட்சம் கையிருப்பு: ரூ.35 இலட்சம்