இதுவரை 78,420 பேருக்கு தொற்று, நேற்று 8 மரணங்கள்

COVID 19: இதுவரை 78,420 பேருக்கு தொற்று, நேற்று 8 மரணங்கள் பதிவு

by Staff Writer 19-02-2021 | 3:31 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 78,420 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 501 பேர் COVID தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர். இதுவரை 71,823 பேர் குணமடைந்துள்ளதுடன், 6175 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் மேலும் 08 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின. 05 ஆண்களும் 03 பெண்களும் நேற்று பதிவான COVID மரணங்களில் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய, நேற்று பதிவான COVID மரணங்களையடுத்து, நாட்டில் COVID தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 430 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இதுவரை 92 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விமானமூடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து நேற்று மாத்திரம் 977 பேர் நாட்டிற்கு வருகை தந்ததாக இராணுவத் தளபதி கூறினார்.